சரியான பாடம், பாடநெறி அல்லது வேலையைத் தெரிவு செய்ய நீங்கள் சிரமப்படுகிறீர்களா? தீர்வுகளைப் பெற CareerMe சோதனையை எடுத்துக் கொள்ளுங்கள். சிறந்த கல்வி மற்றும் தொழில் தெரிவுகளைச் செய்ய உங்களுக்கு உதவுவதில் தொழில்துறை வழிகாட்டுதல் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
பாடசாலையிலிருந்து விலகியதன் பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பது இலகுவானதொன்றல்ல. உங்களின் தெரிவுகளைப் புரிந்துகொள்ள முயற்சித்து, அதன்பின்னர் உங்களுக்கு மிகப்பொருத்தமான ஒன்றினை தீர்மானிப்பது அதனிலும் கடினமானது. உங்களுக்கு எழுச்சியூட்டுவதற்காகவும், தொழில்த்துறை ஒன்றினை தெரிவு செய்து, விருப்பத் தெரிவுகளை ஆய்வது எவ்வாறு என்பதுபற்றி உங்களுக்கு வழிகாட்டுவதற்காகவும் நாங்கள் இங்கிருக்கிறோம்.
உங்கள் உயர் தர (A / L) பாடத்துறை அடிப்படையில் பல்கலைக்கழக பட்டங்களைக் கண்டறியவும்
நீங்கள் விரும்பும் பாடங்களின் அடிப்படையில் தொழில்த்துறைகளை தேடுங்கள்
உங்களிடம் உள்ள திறன்களைக் கொண்டு தொழில்த்துறைகளைத் தேடுங்கள்
O/L மற்றும் A/L ற்கான கடந்த கால பலவுள் தெரிவு வினாக்களைப் பயிற்சி செய்யுங்கள்
வெவ்வேறு தொழில்த்துறைகளின் தொழில்களை ஆராயுங்கள்
தொழில்த்துறை ஆலோசகரைச் சந்திக்கவும்
தனிப்பயனாக்கப்பட்ட தொழில் மற்றும் கல்வி தகவல்களைப் பெறுங்கள்.
070 7798488 ஐ அழைத்து தொழில்த்துறை கலந்துரையாடல் ஒன்றைத் திட்டமிடவும்
எமது இலவச தொழில்த்துறை சோதனையுடன் ஆரம்பியுங்கள். உங்களுக்குப் பொருத்தமான கல்வி மற்றும் தொழில்த்துறை விருப்பத் தெரிவுகளை அறிவுறுத்தும் உங்களது ஈடுபாடுகள் மற்றும் தொழில்சார் தனித்துவங்களை இனங்காணக்கூடிய, பயன்படுத்துவதற்கு இலகுவான, ஒரு வினாக்கொத்து இதுவாகும். அறிவுறுத்தப்பட்ட தெரிவுகள் உங்களது தேவைகளுடனும், அவசியமானவைகளுடனும் ஒத்துப்போகாமல் இருந்தால்கூட, நீங்கள் எந்த கல்வியையும், தொழில்த்துறை தெரிவுகளையும் தவிர்க்கவேண்டும் என்பது பற்றியாவது அறிந்திருப்பீர்கள்.
அது, சில சந்தர்ப்பங்களை பொறுத்திருக்கின்றது. சில மூன்றாம் நிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிப்பிட்ட சில கற்கைநெறிகளுக்கு மாணவர்களை க.பொ.த. (சா/த)இற்குப் பின்னர் நேரடியாக ஏற்றுக்கொள்கின்றன. இந்த கற்கைநெறிகளை நீங்கள் இனங்கண்டு அவை உங்களது தொழில்த்துறை மேம்பாட்டிற்கு எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் கல்விகற்பதற்கு திட்டமிட்டிருந்தால், க.பொ.த. (உ/த)இற்குப் பதிலாக வெவ்வேறு நாடுகளுக்கு குறிப்பான பிற நுழைவுப் பரீட்சைகளை எடுப்பதற்கும் நீங்கள் ஆலோசிக்கலாம், உதாரணமாக: SAT (Scholastic Assessment Test), IB (International Baccalaureate), போன்றவை. விரிவான விளக்கம் ஒன்றினைப் பெறுவதற்கு, தொழில்த்துறை ஆலோசகர் ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்
நீங்கள் பாடசாலையை விட்டு விலகிய பின்னர் எந்தவித வேலையை செய்யலாம் அல்லது என்ன மேற்படிப்பை தொடரலாம் என்பதை தீர்மானிக்கும் ஒரு பலமான தீர்மானிப்பு சக்தியாக நீங்கள் பாடசாலையில் படிக்கும் பாடங்கள் விளங்கும். உங்களுடைய ஈடுபாடுகளின் அடிப்படையில் என்ன பாடங்களை படிக்கவேண்டும் என்பது பற்றியும், உங்களது பாடத் தெரிவுகள் உங்களது எதிர்கால தொழில்துறை திசையை எவ்வாறு உறுதிப்படுத்தும் என்பது பற்றியும் புரிந்துகொள்ள எமது தொழில்த்துறை ஆலோசகருடன் கலந்துரையாடவும்.
அடுத்ததாக என்ன செய்யலாம் என்னும் பிரச்சனையை அதிகமான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். “நான் பல்கலைக்கழகத்துக்கு செல்வதா, வேலை ஒன்றினை தேடுவதா அல்லது “இடைநடு வருடம்” ஒன்றினை மேற்கொள்வதா?” என்பது மனதில் எழும் ஒரு சாதாரண வினாவாகும். கவலைப்பட வேண்டாம். நீங்கள் கல்வி பற்றிய அல்லது தொழில்த்துறை தெரிவொன்றினை எடுப்பதற்கு முன்னர், சரியான தகவலைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களால் என்ன செய்ய இயலும் என்பதுபற்றி முதலில் அறிந்து கொள்ளவும். உங்களது தனித்துவப் பண்புகளால் உங்களது தொழில்த்துறையை உருப்படுத்த இயலும். எமது இலவச தொழில்த்துறை சோதனை உங்களது தனித்துவத்தை நீங்கள் அறிந்துகொள்ள உதவுவதுடன், உங்களுக்கு பொருத்தமான தொழில்கள்/படிப்பு வகைகள் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. இரண்டாவதாக, பிறருடன் பேசுங்கள். என்னவிதமான விருப்பத் தெரிவுகள் உங்களுக்கு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் துறைத்திறனாளிகள் மற்றும் தொழில்துறை ஆலோசகர்கள் ஆகியோர் இதற்கு சிறந்தவர்கள். உங்களது விருப்பத் தெரிவுகளை மேலும் ஆழமாக நீங்கள் புரிந்துகொள்வதற்கு ஆலோசகர்கள் உங்களுக்கு உதவமுடிவதுடன், உங்களது தெரிவு உங்களுக்கு எத்தகையானது என்பதை அறிந்துகொள்ள விரிவான தகவலை வழங்குவர். உதாரணமாக; நீங்கள் இலங்கையில் ஒரு வைத்தியராக வருவதற்கு எண்ணினால், வைத்தியரொருவரின் நாளாந்த கடமை வாழ்க்கை எவ்வாறானது, என்ன வகையான மருத்துவ நிபுணத்துவங்கள் உள்ளன, எத்தனை வருடங்கள் படிக்க வேண்டும், நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும், நீங்கள் வெளிநாட்டில் பணியாற்ற முடியுமா மற்றும் உங்களுக்கான எதிர்கால வாய்புகள் என்ன? என்பது பற்றி அறிந்து கொள்ளலாம். நீங்கள் சாமர்த்தியமான முடிவுகளை எடுப்பதற்காக இந்த வினாக்களை ஆராய்வது முக்கியமானதாகும். ஆலோசகர் ஒருவருடன் பேசவும்.
உங்களது தகைமைகளை விசாலப்படுத்துவதற்கும், தொழில்சந்தையில் மேலும் உறுதியாக உங்களை நிலைநிறுத்துவதற்கும் பல்கலைக்கழகத்துக்கு செல்வது ஒரு பாரிய தெரிவாகும். எவ்வாறாயினும், நீங்கள் தொடரவிரும்பும் தொழில்துறையை முதலாவதாக கருத்தில் கொண்டு, உங்களது தொழில்துறை மேம்பாட்டிற்கு உதவக்கூடிய ஒரு பயனுள்ள பட்டப்படிப்பை நீங்கள் தெரிவு செய்யலாம். மேலதிகமாக, சில குறிப்பிட்ட தொழில்துறைகள் பல்கலைக்கழக பட்டங்களை அவசியமான தேவையாக கொள்ளாதவையாக இருந்து, உ/தரத்தின் பின்னர் நேரடியாக “பணியிடை கற்றல்” ஊடாக உங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கிறது. உங்களது தொழில்த்துறை தெரிவுக்கு உதவும் மிகச்சிறந்த கல்வி வழிப்பாதைகளை இனங்காண்பதற்கு எமது தொழில்த்துறை ஆலோசகர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
உங்களது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு நீங்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால், தேவைப்படும் பரீட்சைகள், நிதி ஏற்பாடு, பல்கலைக்கழக விண்ணப்ப ஒப்பீட்டுப் பட்டியல் மற்றும் காலக்கெடுக்கள் போன்ற முக்கிய விடயங்களை முன்னராகவே திட்டமிடுவதற்கு ஆரம்பியுங்கள். உங்களது உ/த அல்லது சா/த இற்குப் பின்னர் இடைவருடம் ஒன்றினை எடுக்காமல், நேரடியாகவே பல்கலைக்கழக கல்வியினை ஆரம்பிப்பதற்கு நீங்கள் விரும்பினால், காலக்கெடுக்களுக்கு குறிப்பான கவனிப்பை வழங்கவும். விண்ணப்பிக்கும் செய்முறைக்கு பலமாதங்கள் தேவைப்படுவதால், உதாரணமாக, நீங்கள் ஐக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் புரட்டாதி 2018 உள்வாங்கலுக்கு பதிவு செய்ய விரும்பினால், 2017 இறுதியிலேயே விண்ணப்பிக்கவேண்டும். எமது தொழில்த்துறை ஆலோசகர்கள் மூலம், உங்களுக்கான கல்வி விருப்பத் தெரிவுகள் மற்றும் நீங்கள் எடுக்கவேண்டிய உடனடி அடுத்த படிமுறைகளை இனங்காண்பது இயலுமாகிறது.