பெற்றோர்

கல்வி அல்லது வாழ்க்கைப் பாதை என்ன என்பதைப் பின்பற்ற உங்கள் பிள்ளைக்கு உதவுவது கடினமான செயல். ஸ்மார்ட் கல்வி மற்றும் தொழில் முடிவுகளை எடுக்க தகவல் இல்லாதது மிகப்பெரிய சவால். இந்த சிரமத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் உங்கள் பிள்ளையின் முடிவெடுக்கும் செயல்முறையை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேவைகளைக் கொண்டுள்ளோம்.


உங்கள் பிள்ளையின் கல்வி மற்றும் தொழில் பாதையில் முதலீடு செய்வது ஒரு முக்கியமான முடிவு. உங்கள் பிள்ளை நன்கு அறியப்பட்ட தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு எமது தொழில்த்துறை வழிகாட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரியான தொழில் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது, சாத்தியமான தொழிற்துறையை அடையாளம் காண்பது மற்றும் மிகவும் பொருத்தமான கல்வி பாதையை தீர்மானிப்பது அனைத்தும் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதவை. அவர்களின் உண்மையான திறனைப் பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும் இல்லாததால், வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் போது பிள்ளைகள் அழுத்தத்தை உணர முடியும். எனவே, தொழிற்துறை வழிகாட்டல் ஆலோசகரிடமிருந்து தகுதிவாய்ந்த உதவியை நாடுவது உங்கள் பிள்ளைக்கு அவர்களின் திறனைக் கண்டுபிடிப்பதற்கும் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.




உங்கள் பிள்ளைக்கு அவர்களின் பலம் மற்றும் மிகவும் பொருத்தமான தொழில் விருப்பத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.






தொழில்த்துறை ஆலோசகரைச் சந்திக்க

தனிப்பயனாக்கப்பட்ட தொழில் மற்றும் கல்வி தகவல்களைப் பெறுங்கள்.
070 7798488 ஐ அழைத்து தொழில்த்துறை கலந்துரையாடல் ஒன்றைத் திட்டமிடவும்.





மேலும் இலவச கருவிகள்


உங்கள் உயர் தர (A / L) பாடத்துறை அடிப்படையில் பல்கலைக்கழக பட்டங்களைக் கண்டறியவும்

  பட்டம் தேர்வி

நீங்கள் விரும்பும் பாடங்களின் அடிப்படையில் தொழில்த்துறைகளை தேடுங்கள்

  பாடங்கள் பொருத்தி

உங்களிடம் உள்ள திறன்களைக் கொண்டு தொழில்த்துறைகளைத் தேடுங்கள்

  திறன்கள் பொருத்தி

O/L மற்றும் A/L ற்கான கடந்த கால பலவுள் தெரிவு வினாக்களைப் பயிற்சி செய்யுங்கள்

  கடந்த கால பலவுள் தெரிவு வினாக்கள்

வெவ்வேறு தொழில்த்துறைகளின் தொழில்களை ஆராயுங்கள்

  தொழில்த்துறை குறியிலக்கு




எங்கள் செயல்பாடுகள்





பெற்றோர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்


தொழில்துறை தெரிவுகளை ஆராயுமாறு உங்களது பிள்ளையை உற்சாகப்படுத்துவதுடன் நீங்கள் ஆரம்பித்து, அவர்கள் முதலில் தம்மைப் புரிந்துகொள்வதற்கு உதவுங்கள். பாடசாலை உள்ளேயும், வெளியேயும் எந்தவிதமான செயல்பாடுகள் அவர்களை ஆர்வமூட்டுகின்றன? அந்த செயல்பாடுகள் தொழில்த்துறைகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன? சில ஆரம்ப யோசனைகளை அவர்கள் பெறுவதற்கு உதவும் பொருட்டு, எமது இலவச தொழில்த்துறை சோதனையை எடுப்பதற்கு உங்களது பிள்ளையை விடவும். அவர்களது விருப்பத் தெரிவுகளின் அடிப்படையில் இது அவர்களுக்கு தொழில்த்துறை தெரிவுகளை வழங்கும். சிபார்சு செய்யப்பட்ட தொழில்த்துறைகளை அவர்கள் விரும்பாவிட்டால்கூட, ஆகக்குறைந்தது அவர்களது விருப்பத் தெரிவுகளை ஓரளவு சிறிய எண்ணிக்கையாகுவதற்கு அவர்களால் இயலக்கூடியதாக இருக்கும்.

துரிதமாக வளர்ந்துவரும் மற்றும் கூடுதலான ஆட்களை தொழிலுக்கமர்த்தும் தொழில்த்துறைகளை கவனித்துப் பாருங்கள், உங்களது பிள்ளை பாடசாலை விலகலுக்குப் பின்னரான கல்வி மற்றும் தொழில்த்துறை தீர்மானங்களை எடுப்பதற்கு நீங்கள் உதவுகையில், குறிப்பிட்ட துறையில் எத்தனை தொழில் வாய்ப்புகள் உள்ளன, மற்றும் அதேவேலை, தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இருக்குமா என்று கணிப்பிடுங்கள். அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட உயர்கல்வி கற்கைநெறியில் உங்களது பிள்ளைக்கு இருக்கக்கூடிய பதில் தொழில்த்துறை விருப்பத் தெரிவுகளை இனங்காண்க. இந்த தகவலை பெறுவதற்கு உங்களுக்கு எமது தொழில்த்துறை வளங்கள் உதவும்.

பெரும்பாலான தொழில்த்துறைகளுக்கு வழமையாக பல்வேறு எண்ணிக்கையிலான சிறந்த நுழைவுப்பாதைகள் உள்ளன; சில தகைமைகள் அடிப்படையானவை; மற்றவை அனுபவ அடிப்படையானவை. CareerMeயில் நாங்கள் வழங்கும் “தொழில்த்துறை வளங்கள்” வழமையான நுழைவுப்பாதைகளை காண்பிக்கும். உங்களது மகன்/மகள் ஈடுபாடு கொண்டுள்ள தொழில்த்துறைகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தொழில்வழங்குநர்களைப் பற்றியும் அவர்கள் ஆராய்ந்து, அவற்றிற்குரிய நுழைவுமட்ட நிலைகளுக்கு எந்தவிதமான, பாடசாலை விலகியோர் அல்லது பட்டதாரி திட்டங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளலாம்.

பல்கலைக்கழகத்துக்கு செல்வது உங்களது மகனுக்கு/மகளுக்கு விசாலமான பரப்பெல்லை கொண்ட பயனுள்ள திறன்களையும், அனுபவங்களையும் வழங்கும். எவ்வாறாயினும், சில குறிப்பிட்ட தொழில்த்துறைகளுக்கு பல்கலைக்கழகம் மாத்திரம் ஒரேயொரு தெரிவல்ல. தற்போது அநேகமான தொழில் வழங்குநர்கள் இளைஞர்களுக்கு தொழில்-இடை பயிற்சிப் பாதைகளை அளிக்கின்றனர். இந்த விடயத்தில், இம்மாதிரியான தேவைகளை நிறைவேற்றக்கூடிய தொழில்களை உங்களது மகன்/மகள் இனங்காண வேண்டும்.