fbpx

பலவுள்தெரிவு வினாத்தாள்கள்

CareerMeயினது மாணவர் சேவைகளின் ஒருபகுதியாக, உள்ளூர் சா/த மற்றும் உ/த மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட CareerMeயினது கணினிமூல பலவுள்தெரிவு வினாக்கள் (MCQ), ஒரு முற்றுமுழுதான இலவச சேவையாகும். தற்போது நாம் சிங்கள மொழிமூலத்தில் கடந்தகால வினாத்தாள்களை வழங்குகின்றோம்.

கல்வி கற்றலின் சகல தரங்களிலும் கடந்தகால வினாத்தாள்கள் மாணவர்களுக்கு அதிமுக்கியமானவையாகும். பயன்படுத்துவதற்கு இலகுவாகவும், வினாக்களை எளிதாக்குவதன் மூலம் வினாக்களை மீண்டும் பார்வையிடுவதற்கான ஆற்றலுடன் இணைந்தியங்கக் கூடியவை. நீங்கள் வேலை மும்முரத்தில் இருக்கும்போது, எத்தனை முறையென்றாலும் பலவுள்தெரிவு வினாக்களை உங்களால் செய்ய இயலுவதுடன், பெறுபேறுகளை உடனடியாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

சில பலவுள்தெரிவு வினாத்தாள்களில் காணப்படக்கூடிய  குறும்பதில் வினாக்கள் எமது கணினி வழி முறையில் உள்ளடக்கப் படுவதில்லை.

பலவுள்தெரிவு வினாத்தாள்களுக்கு விடையளிப்பதற்கு சில ஆலோசனைகள்:

பலவுள்தெரிவு வினாத்தாள்களை அணுகுவதற்கு பல வழிகள் உள்ளன. உங்களுக்கு உறுதியாக பதில் தெரிந்த சகல வினாக்களுக்கும் முதலில் பதிலளிக்குமாறு சிலர் ஆலோசனை வழங்குவர்; வினாத்தாளை ஒழுங்கு முறையாக, வரிசைப்படி விடையளிக்குமாறு இன்னும் சிலர், ஆலோசனை வழங்குவர்.

எந்தமுறை உங்களுக்கு சிறந்தது? இந்த ஆலோசனையை சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு தெரியாத வினா ஒன்றில் அளவுக்கதிகமான நேரத்தை செலவிட்டு, இலகுவான வினாக்களுக்கு நேரம் போதாமல் செய்வதிலும் பார்க்க,  உங்களுக்கு தெரிந்த சகல வினாக்களுக்கும் சரியாக விடையளிப்பது மேலும் சிறந்தது. வினா ஒன்றிற்கான விடை உங்களுக்கு உறுதியாக தெரியாமல் இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட வினாவினை அடையாளமிட்டு, விடைத்தாளை கையளிப்பதற்கு முன்னர், மீண்டும் அந்த வினாவிற்கு வந்து அதற்கு விடையளிப்பதற்கு எமது முறைமை உங்களுக்கு வழிசெய்கிறது.

நாங்கள் வழங்கும்பாடநெறிகள்

உங்களுக்கு கிடைப்பது

பயன்படுத்துவதற்கு இலகுவான இடைமுகம் – எந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும் பரீட்சை வினாத்தாள்களை செய்யவும்

உடனடியான பெறுபேறுகள் – உங்களது பலமான/பலவீனமான பகுதிகள்

பன்மடங்கு முயற்சிகள் – பரீட்சை ஒன்றினை எத்தனை முறைகளும் எடுங்கள்

வினா ஒன்றுக்கான நேர அளவு – எமது “நேரம் திட்டமிடல்” முறைமையுடன் உங்களது வேகத்தை சரிபாருங்கள்

இரண்டு செயல்படு முறைகள்

பரீட்சை முறை: ஒரு நிஜமான பரீட்சையை ஒத்தது, நேரஎல்லை உடையது.

பயிற்சி முறை: நேரஎல்லை அற்றது, உங்களது சுயவேகத்திற்கு ஏற்றவாறு செய்யுங்கள்

how can we help you?

Contact us at the CareerMe office nearest to you or request a call back for further clarification. 

க.பொ.த/(உ/த) அல்லது க.பொ.த. சா/த) இற்குப் பின்னர் என்ன செய்யலாம்?

Demos

Layout

Wide
Boxed