fbpx

தொழில்துறை பரீட்சை

தொழில்துறை பரீட்சை என்றால் என்ன?

ஈடுபாடுகள், கோட்பாடுகள், முன்னுரிமைகள், ஊக்குவித்தல்கள் மற்றும் திறன்கள் போன்ற தனிநபர்  பண்புகள், பலவித தொழில்துறை விருப்பத் தெரிவுகள் மற்றும் பணிச் சூழல்கள் ஆகியவை மூலம் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வெற்றி மற்றும்  திருப்தி மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி, தொழில்துறை பரீட்சை ஆகும். தொழில்துறை பரீட்சைகள் உலகெங்கிலும், மற்றும் பல அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளதுடன், மாணவர்கள் தமக்கென தொழில்துறையொன்றை தீர்மானிப்பதற்கு முன்னர், பரீட்சை ஒன்றினை எடுப்பது சாதாரணமாக கட்டாய தேவையாகும்.

உங்களது தொழில்சார் தனித்துவம் பற்றிய  ஆழறிவினை வழங்குவதற்கு ஏற்றவாறு எமது  இலவச தொழில்துறை பரீட்சை வடிவமைக்கப்பட்டுள்ளது ஏனெனில் இந்த தகவல் தொழில்துறை ஒன்றினை தெரிவுசெய்வதற்கு முன்னர் மிக அவசியமான ஒரு தேவையாகும். புகழ்பெற்ற உளவியல் நிபுணர் கலாநிதி ஜோன் கொலன்ட் (Dr. John Holland)இனால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை இந்த பரீட்சை அடிப்படையாகக் கொண்டது. இது ஆறுவகையான தொழில்சார் தனித்துவங்களை அளவிடுகின்றது: யதார்த்தமானவை (R), ஆய்ந்தறிதல் (I), உருவாக்கல்திறன் (A), சமூக (S), ஊக்கெழுச்சி (E), மற்றும் மரபுமுறை (C). இவைகள் கொலன்ட் குறியீடுகள் அல்லது ஈடுபாடு குறியீடுகளென்றும் அழைக்கப்படும்.

பரீட்சை நான்கு சுருக்கமான பிரிவுகளை அடக்குகின்றது:

  • நீங்கள் எந்தவிதமானவர்: உங்களது தனிப்பட்ட பலங்கள் மற்றும் பலவீனங்கள் யாவை?
  • உங்களால் இயலுமா: எந்தவிதமான செயல்பாடுகளை உங்களால் செய்ய இயலும்?
  • உங்களுக்கு இதனை செய்ய விருப்பமா: உங்களுக்கு ஆர்வமுட்டும் செயல்பாடுகள் அல்லது வேலை வகைகள் யாவை?
  • மனதை ஈர்க்கும் தொழில்கள்: எந்த தொழில்களை நீங்கள் விரும்புகின்றீர்கள் அல்லது விரும்பவில்லை?

உங்களுடைய தனித்துவத்தின் குணாதிசயத்தின் அடிப்படையில், உங்களுக்கு எந்தவிதமான பணிச் சூழல்கள் மற்றும் தொழில்கள்  மிகச்சிறப்பாக பொருந்தும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்கு இந்த பரீட்சை உங்களுக்கு உதவும். பரீட்சையை பூர்த்திசெய்த பின்னர், உங்களுடைய தொழில்சார் தனித்துவத்தை இனங்கண்டு, உங்களது தனித்துவத்துடன் ஒத்துப்போகக்கூடிய தொழில் பட்டியலை பரிந்துரைக்கும் தனிக்கவனம் செலுத்தப்பட்ட பரீட்சை அறிக்கை ஒன்று உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். உங்களது விருப்புகளை ஒத்திருக்கும் தொழில்துறையை தெரிவு செய்வது, வெற்றிப்பாதைக்கான உங்களது வாய்ப்புகளை அதிகரிக்கும்

இந்தப் பரீட்சையை எதற்காக எடுக்கவேண்டும்?

தொழில்துறை ஒன்றினைத் தெரிவது உங்களது வாழ்க்கையில் நீங்கள் எடுக்கக்கூடிய அதிமுக்கிய முடிவுகளில் ஒன்றாவதுடன், இந்தத் தருணத்தில் ஒருவர் குழப்பமடைதல் மிகவும் இயல்பானதாகும். உங்களது உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தமது இடைவிடாத வினாக்களால், உதாரணமாக, “சா/தரத்திற்குப் பின்னர் அல்லது உ/தரத்துக்குப் பின்னர் என்ன செய்வீர்கள், “சா/தரத்துக்குப் பின்னர் நீங்கள் எந்த கற்கைநெறியினை தெரிவு செய்வீர்கள்?” அல்லது “நீங்கள் எந்த தொழிலை செய்வீர்கள்?” போன்ற அவர்களது கேள்விகளால் இந்த குழப்ப நிலை மேலும் அதிகரிக்கும். இந்த முடிவுகள்  உங்களது வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கப் போகும் முக்கிய முடிவுகளாவதால், தொழில்துறை விருப்பத் தெரிவு ஒன்றினை முடிவு செய்யும்போது அரை மனதுடன் அல்லது பிறருடைய அழுத்தங்களின் மத்தியில் செய்யாமலிருப்பது கட்டாயமாகும்.  தொழில்துறை ஒன்றை தெரிவுசெய்வது, நீங்கள் சிந்திக்கக்கூடிய இறுதியான தொழில்துறையை முடிவுசெய்தல் என்பதன் பொருளல்ல என்பதை புரிந்துகொள்வது முக்கியமானததாகும், இன்னும் சரியாக சொல்வதானால், நபர் ஒருவர் வளர்ந்துவரக்கூடிய திறன்கொண்ட தொழில்துறை பாதையை இனங்காணும் ஒரு வழியாக அது உள்ளது. உங்களது சிறப்பியல்புகளை நீங்கள் புரிந்து கொள்வதற்கும்,  உங்களது தொழில்சார் தனித்துவத்துக்கு ஏற்றவாறு எந்த தொழில்துறைவகை உங்களுக்கு மிகச்சிறப்பாக பொருந்தும் என்பதை இனங்காணுவதற்கும் எமது தொழில்துறை பரீட்சை உங்களுக்கு உதவும்.

தொழில்துறை பரீட்சையை எவ்வாறு எடுப்பது?

படிமுறை 1) உங்களது பெயர், மின்னஞல் முகவரி மற்றும் இரகசியச் சொல் ஆகியவற்றை வழங்கி, கணக்கொன்றை உருவாக்கவும்.

படிமுறை 2) இலவச தொழில்துறை பரீட்சையை ஆரம்பிக்கவும். 

பரீட்சையை பூர்த்திசெய்வதற்கு 15 நிமிடங்கள் செல்லும்.

பரீட்சையை அவசரமாக முடிக்கவேண்டாம். உங்களது தொழில்துறை உங்களது வாழ்க்கை, ஆகவே நீங்கள் யாரென்பதை புரிந்துகொள்ள தேவையான நேரத்தை செலவிடவும்.

how can we help you?

Contact us at the CareerMe office nearest to you or request a call back for further clarification. 

Demos

Layout

Wide
Boxed