fbpx

எங்களது தொழில்துறை வழிகாட்டல் அணுகுமுறை

21ஆம் நூற்றாண்டு வாழ்க்கை முறையில் தெரிவு ஒரு பாரிய பகுதியாகும். ஒவ்வொருநாளும் எம்முன்னே தெரிவுகள் வந்தவண்ணமே உள்ளன. இந்த தெரிவுகளில் சில சிக்கலிலாது, நேரடியானவையாகும். கல்வி வழிப்பாதையை தீர்மானித்தல் போன்ற மற்றவை, சிக்கலானதும் கூடிய செலவினங்களை அளிக்கக்கூடியவையுமாகும். மிக அதிகமான தெரிவுகளும், தகவல்களும் இருக்கும்போது இவற்றிற்கு அதிக நேரமும், சக்தியும் தேவையாகும். ஒருவர் தொழில்துறை மற்றும் கல்வித் தெரிவுகளை மேற்கொள்ளும் வயது 16, 18 அல்லது பட்டதாரிப் பருவமாக இருந்தாலும், சிறந்த தீர்மானங்களை எடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான தகவல், ஆலோசனை மற்றும் வழிகாட்டல்  அத்தியாவசியமாகும்.

சரியான தொழில்துறையை தெரிவு செய்தல் மாணவர் ஒருவரின் வாழ்க்கையில் அவர் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்றாகும்.

மனிதனையும், தொழில் நுட்பத்தையும் சம்பந்தப்படுத்தும் ஒரு மூன்று படிமுறை கலப்பு வழிகாட்டல் தீர்வு ஊடாக “CareerMe” மாணவர்களுக்கு உதவுகின்றது. எங்களது இணையதள வலைவாசல் ஊடாக வழங்கப்படும் இலவச கணினி நேரடி தொழில்துறை பரீட்சை, மாணவர்களின் திறன்கள், இயலுமைகள் மற்றும் ஈடுபாடுகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் தொழில்துறைகளை அவர்கள் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவும். அதனைப் பின் தொடர்ந்து, “CareerMe”  ஆலோசகர் ஒருவருடன் மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட ரீதியிலான கலந்துரையாடல்,  மாணவர்கள் தமக்கு ஆலோசனை வழங்கப்பட்ட சகல தொழில்துறைகளிலிருந்து அதிசிறந்த  தொழில்துறைகளை தெரிவுசெய்ய உதவும். ஆலோசனை வழங்கப்பட்ட சகல தொழில்துறைகளிலிருந்தும் அதிசிறந்த தொழில்துறைகளை மாணவர்கள் தெரிவு செய்வதற்கு ஆலோசகர் அவர்களுக்கு உதவுவார். உங்களால் தெரிவுசெய்யப்பட்ட தொழில்துறைக்கென பின்பற்றவேண்டிய கல்வி மற்றும் பயிற்சி தெரிவுகளை சிபார்சு செய்யும் செயல்நிலைத் திட்டமொன்றினை நாம் அதன்பின் தயாரிப்போம்.

உங்களது தொழில்துறையை திட்டமிடுவதற்கு ஆரம்பிப்பதை எவ்வளவு வேண்டுமானாலும் முன்னராக மேற்கொள்ளலாம்.

தொழில்துறை பற்றிய தீர்மானங்களை  மேற்கொள்ளல்

பாரம்பரியமாக, மிகப்பெரும்பாலான மாணவர்கள் தமது பரீட்சைப் புள்ளிகள், பெற்றோரின் ஆலோசனை அல்லது தமது சக மாணவர் மூலம் பெறும் அழுத்தம்  ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமது தொழில்துறைகளை தெரிவு செய்வர். பாடசாலைக்கு அப்புறமான கல்வியில் வருடக்கணக்கான பெறுமதிமிக்க காலத்தினையும் பணத்தினையும் செலவிட்டபின், பெரும்பாலானோர் தொழிலொன்றை ஆரம்பித்த சில காலத்திலேயே அந்தத் தொழில் தமக்குப் பொருந்தாத ஒன்றென்றும், அது தமக்கு விருப்பமில்லாத ஒன்றென்பதையும் உணர்கின்றனர். ஆகவே, அவர்கள் மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஒரு பெரும்செலவான தவறு.

இந்த தவறினை மேற்கொள்ளாமலிருக்கும் பொருட்டு, சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளை CareerMe வழங்குகின்றது. உங்களது தனித்துவப் பண்புகள், திறன்கள் மற்றும் ஈடுபாடுகளுடன் ஒத்துப்போகும் தொழில்துறை ஒன்றினை முதலில் தெரிவு செய்யவும். அதன்பின்னர், பெரும்பாலான வெற்றிகரமானதும், பயனளிக்கக்கூடியதுமான தொழில்துறைகளை அடைவதற்கான வழியாக, தெரிவுசெய்யப்பட்ட இலக்கை அடைவதற்கான கல்வித் தெரிவுகளை திட்டமிடவும்.

எமது தொழில்துறை வழிகாட்டல் செயல்முறை

இதன் முதலாவது படிமுறையாக, எமது இணைய வலைவாசலுக்குள் நுழைந்து, கலாநிதி. ஜோன் ஹொலந்தின் “வாழ்க்கைத் தொழில் தெரிவுகள் மேற்கொள்ளல்” தத்துவத்தின் அடிப்படையிலான எமது இலவச தொழில்துறை பரீட்சையை எடுக்கவும். இது உங்களுக்கு பொருந்தக்கூடிய தொழில்துறைகளை சிபார்சுசெய்யும் ஒரு தனிப்பட்டரீதியிலான தொழில்துறை அறிக்கையை வழங்கும்.

தொழில் சம்பந்தமான ஆறு தனித்துவபண்பு வகைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உங்களை இனங்கண்டு: யதார்த்தமானவை (R), ஆய்ந்தறிதல் (I), உருவாக்கல்திறன் (A), சமூக (S), ஊக்கெழுச்சி (E), மரபுமுறை (C); (RIASEC என்றும் அழைக்கப்படும்) உங்களது தனித்துவ பண்புகளுடன் ஒத்துப்போகும் தொழில்களை பட்டியல்படுத்தும்.

தொழில்துறை பரீட்சையை பூர்த்தி செய்தவுடன், நீங்கள் எந்தவிதமான பண்புகளையுடையவர் என்பதுபற்றியும், உங்களுக்கான சரியான தொழில்துறை தெரிவுகள் எவை என்பது பற்றியும் உங்களுக்கு மேலும் சிறப்பான கருத்து பிறக்கும். இந்த தொழில்துறை தெரிவுகளை புரிந்துகொள்வது அடுத்த படிமுறையாகும். உங்கள் வசமிருக்கும் தெரிவுகளை ஆலோசித்து, தொழில்துறை செயல்நிலைத் திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடிய தொழில்துறை ஆலோசகர் ஒருவருடன் சந்திப்பை ஏற்படுத்தும் பொருட்டு,  வேண்டுகோள் விடுக்கவும்.

ஒரு குறிப்பிட்ட துறையில் தொழில் ஒன்றினை வைத்திருப்பதன் அர்த்தத்தினை இந்த கலந்துரையாடல் விபரமாக விளக்கும். குறிப்பிட்ட தொழில்துறை ஒன்றில் சம்பந்தப்படும் கடமைகள் என்ன, தேவைப்படும் கல்வித் தகமைகள் என்ன, இந்த கற்கைநெறிகளை எந்த கல்லூரிகள் வழங்குகின்றன, நீங்கள் பட்டம்பெற்ற பின்னர் உங்களுக்கான தொழில் தெரிவுகள் யாவை?

உங்களது தொழில்துறை கலந்துரையாடலுக்குப் பின்னர், உங்களது எதிர்கால தொழில்துறை பற்றிய தகவல் வழங்கப்பட்ட தீர்மானமொன்றினை எடுப்பதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்களது தொழில்துறை கலந்துரையாடலின் அடிப்படையில், உங்களால் தெரிவு செய்யப்பட்ட தொழில்துறைக்கான செயல்நிலைத் திட்டம் ஒன்றினை நாங்கள் உருவாக்குவோம். செயல்நிலைத் திட்டம் என்பது, உங்களது அடுத்த நகர்வுகளை விபரிக்கும் பாதை வரைபடம் ஆகும். ஒரு தொழிலை தெரிவு செய்வதிலிருந்து, உங்களது தெரிவு செய்யப்பட்ட தொழில்துறையில் பணிபுரியும் வரை எவ்வாறு பயணிப்பது என்பதை அது விளக்குகின்றது.

உங்களது குறும்பட்டியலிடப்பட்ட தொழில்துறை தெரிவுகளில் இந்த செய்முறை திட்டம்  (ங்கள்) தங்கியுள்ளது. உங்களுடைய தொழில் தெரிவுகளுக்கு தேவைப்படும் தரங்கள்,தேவைப்படும் கல்வி, தொழிலின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் வரக்கூடிய தொழில் வழங்குநர்கள் ஆகியவற்றை அது விபரிக்கும். நீங்கள் விரும்பும் அல்லது விரும்பாத தொழில்துறைவகை பற்றிய அறிவைத்தரும் செய்முறையாக இது இருக்கும். 

உங்களது கல்வி மற்றும் தொழில்துறை பற்றி நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாங்கள் எவ்விதம் உதவமுடியும் என்பதுபற்றி மேலும் அறிந்துகொள்ள எம்முடன் பேசவும்.

உங்களது தொழில்துறை செயல்நிலைத் திட்டத்தினை நீங்கள் எவ்வாறு உருவாக்குவீர்கள்?

  • தொழில்துறை பரீட்சையை பூர்த்தி செய்க
  • ஆலோசகருடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுத்து, வழிகாட்டல் பொதி ஒன்றினை தெரிக
  • வாடிக்கையாளர் விண்ணப்பபத்திரம் ஒன்றினை சமர்ப்பிப்பதற்கான மின்னஞசல் ஒன்றினை பெற்று சந்திப்பு நியமனத்தை உறுதிப்படுத்துக
  • பணத்தை செலுத்தி, (வங்கி பரிமாற்றம் அல்லது நேரில்) எமது தொழில்துறை ஆலோசகரை சந்திக்கவும்
  • உங்களால் தெரிவுசெய்யப்பட்ட தொழில்துறை(கள்)க்கான விரிவான தொழில் செயல்நிலைத் திட்டத்தை பெறுக

தொழில்துறை சம்பந்தமான தனிப்பட்டகவனம் செலுத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றை நாடுகின்றீர்களா?

Demos

Layout

Wide
Boxed